சுத்தமானது எது? அசுத்தமானது எது?
லேவியராகமம் 11, உபாகமம் 14
உபாகமம் 14: 3. அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்
7 உண்மைகள்
1. அசுத்தமான மாமிசம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது
2. வேதத்தில் தேவனை பின்பற்றியவர்கள் அசுத்த மாமிசத்தை சாப்பிட்டதில்லை
3. இயேசு கிறிஸ்துவோ அல்லது அவரது சீஷர்களோ அசுத்த மாமிசத்தை சாப்பிடவில்லை
4. புதிய பூமியில் அசுத்த உணவு இல்லை
5. கிறிஸ்தவர்கள் தங்களுடைய நோயற்ற வாழ்க்கைக்கு பொறுப்பாளிகள்
6. அசுத்த மாமிசம் உண்பவர்கள் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை
7. புதிய ஏற்பாட்டில் அசுத்த உணவு வகைகளை தேவன் சாப்பிட சொல்லவில்லை
தேவன் 10 கட்டளைகளும், சுகாதாரத்துக்கடுத்த கட்டளைகளும் சீனாய் மலையில் கொடுக்கும் முன்பே தேவனுடைய பிள்ளைகள் சுத்தமானது எது அசுத்தமானது எது என்று அறிந்திருந்தனர், அதை தேவன் கற்றுக்கொடுத்திருந்தார். அதற்கு உதாரணம் தான் நோவா.
ஆதியாகமம் 7
2. பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,
3. ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
ஆதியாகமம் 8
20. அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
மிருகங்களில் சுத்தமானது எது அசுத்தமானது எது?
லேவியராகமம் 11
1. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:
3. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
4. ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
மிருகங்களில் அசை போடுகிறதும், விரிகுளம்புகள் உள்ள மிருகங்கள் சுத்தமானவை. ஒரு மிருகம் அசை போட்டு விரிகுழம்பு இல்லை என்றாலோ, அல்லது ஒரு மிருகம் ஆசை போடாமல் விரிகுழம்பு இருந்தாலோ, அது உண்பதற்கு அசுத்தமான மிருகம்.
சுத்தமான மிருகங்கள் சில (உதாரணங்கள்):
ஆடு, மாடு, மான்
அசுத்தமான மிருகங்கள் சில (உதாரணங்கள்):
ஆசை போடுகிறது, விரிகுழம்பு இல்லாதது
ஒட்டகம்
குழிமுசல்
விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அசைபோடாது
பன்றி
நீந்துகின்றவைகளில் சுத்தமானது எது அசுத்தமானது எது?
லேவியராகமம் 11
9. ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
10. ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11. அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
12. தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
செதிளும் சிறகும் இருந்தால் அது சுத்தமானது.
செதிளும் சிறகும் இல்லை என்றாலோ, (அல்லது) செதிள் இருந்து சிறகு இல்லை என்றாலோ (அல்லது) சிறகிருந்து செதிள் இல்லை என்றாலோ அவைகள் அசுத்தமானது
நீந்துகின்றவைகளில் சுத்தமானது (உதாரணங்கள்):
சூரை மீன், சால்மன் மீன்
நீந்துகின்றவைகளில் அசுத்தமானது (உதாரணங்கள்):
சிப்பி, டால்பின், நண்டு, இறால், சுறா, ஆமை
பறவைகளில் சுத்தமானது எது அசுத்தமானது எது?
லேவியராகமம் 11
20. பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
உபாகமம் 14
11. சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.
உண்ண அசுத்தமான பறவைகள் (உதாரணங்கள்):
கழுகு, கருடன், கடலுராஞ்சி, பருந்தும், சகலவித வல்லூறும், சகலவித காகங்களும், தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும், ஆந்தை, நீர்க்காகம், கோட்டான், நாரை, கூழக்கடா, குருகும், கொக்கு, சகலவித ராஜாளி, புழுக்கொத்தி, வௌவால்
உண்ண அருவருப்பான மற்றவைகள்
லேவியராகமம் 11
29. தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
30. உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
41. தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
42. தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும் வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
43. ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
கொழுப்பு சாப்பிடக்கூடாது
இரத்தம் சாப்பிடக்கூடாது
லேவியராகமம் 7
22. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
23. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.
24. தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
25. கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
லேவியராகமம் 7
26. உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
27. எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 17
13. இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
14. சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
லேவியராகமம் 19
26. யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
தானாய் செத்ததை சாப்பிடக்கூடாது
லேவியராகமம் 22
8. தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.
அசுத்த உணவு பரலோகம் கொண்டு சேர்க்குமா?
ஏசாயா 66
15. இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
17. தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் தேவன் கொடுத்த உணவு எது?
ஆதியாகமம் 1
29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
அசுத்த உணவு சாப்பிட பேதுருவிற்கு தேவன் கட்டளை கொடுத்தாரா?
அப்போஸ்தலர் 10
10. அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
11. வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
12. அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
13. அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
14. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
15. அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
16. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பேதுரு அசுத்த உணவு எது என்று தெளிவாக அறிந்திருந்தார். அதனாலேயே அந்த காட்சி கண்டபோது, இவைகள் "தீட்டும் அசுத்தமும்" என்று கூறினார்.
ஆனால் தேவன் அவைகளை சாப்பிட சொன்னார். அதன் உட்கருத்து என்ன? கீழே உள்ள வசனங்களை வாசிப்போம்
அப்போஸ்தலர் 10
17. அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:
28. அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில், யூதனுக்கு புறஜாதியான் தீட்டு. இயேசு கிறிஸ்து பரம் ஏறி சென்ற பிறகு, பேதுருவையும் புறஜாதிகளிடத்தில் ஊழியம் செய்ய அனுப்புகிறார், ஆனால் புறஜாதிகளை தீட்டாக பார்க்காதே என்றே இயேசு கிறிஸ்து அந்த காட்சி மூலம் விளக்கி கூறினார்.
தேவன் புதிய ஏற்பாட்டிலும், அசுத்தமானதை பரிசுத்தப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது
புதிய பூமியில் என்ன உணவு?
ஏசாயா 11
6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
7. பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
ஏசாயா 65
25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த பூமியை படைத்தபோது மனிதனுக்கும் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், ஊரும் பிராணிகளுக்கும் தேவன் சைவ உணவை கொடுத்தார். அதே சைவ உணவை தான், புதிய பூமியிலும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், ஊரும் பிராணிகளுக்கும் தேவன் கொடுக்கிறார்.