தானியேல் 2
முகவுரை: தேவன் அன்பானவர். தேவன் உலக முடிவை இன்றே அறியும் தேவன். இந்த உலகம் பாவத்தால் சீர்கெட்டு, அழியப்போகிறது என்பது அவருக்கு தெரியும். அழிவுகள் வரும்போது, மனுக்குலம் தாம் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் இருக்கிறது. ஆனால், தேவன் என்ன நடக்கப்போகிறது என்று முன்பே தம்முடைய பிள்ளைகளுக்கு விளக்கமாக தீர்க்கதரிசனங்கள் வாயிலாக சொல்லிக்கொடுக்கிறார்.
ஆமோஸ் 3:7. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்
அதில் மிக முக்கியமான தீர்க்கதரிசனம் தான் இந்த தானியேல் 2 ம் அதிகாரம். இறுதியில் நடக்கும் காரியங்களை இன்றே நமக்கு சொல்லிக்கொடுக்கிறார்.
ஏசாயா 46:
9. முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.
10. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்
அதனால் நாம் மற்றவர்கள் வஞ்சிக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது இயேசு பெருமானின் உபதேசம்.
மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
விளக்கம்:
இங்கு நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு கனவு காண்கிறார். அந்த கனவில் தேவன் இன்று நடக்கும், இனிமேலும் நடக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு தமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார் என்று பாப்போம்.
நேபுகாத்நேச்சார் ராஜாவின் கனவு
தானியேல் 2:1. நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
நேபுகாத்நேச்சார் ராஜாவின் கனவை விளக்குவதாக தானியேல் சொல்கிறார்
தானியேல் 2
2. அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
11. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.
19. பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.
26. ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.
27. தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
28. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:
29. ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.
ராஜாவின் கனவை, தானியேல் சொல்கிறார்
தானியேல் 2
31. ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
32. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,
33. அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
34. நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது.
35. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
36. சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.
வரலாற்றில் ராஜா கண்ட கனவின் ராஜ்ஜியங்கள்
தலை பசும்பொன்:
தானியேல் 2
37. ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.
38. சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.
பாபிலோன் ராஜ்யம் . கி.மு . 606 முதல் 538 வரை .
- பொன்னகரி - ஏசாயா 14:14. 15மைல் சதுரம்.
- அதன் விழுகை ஏசாயா 13:19-22.
- மேதிய பெர்சியர் பிடித்தனர் . தானியேல் 5:31
மார்பும் அதின் புயங்களும் வெள்ளி:
தானியேல் 2
39. உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்;
வெள்ளி - மார்பும் புயங்களும் . மேதிய பெர்சிய ராஜ்யம் . கி.மு. 538 முதல் 331 வரை .
- 127 நாடுகளை ஆண்டனர் . எஸ்தர் 1:1
வயிறும் அதின் தொடையும் வெண்கலம்:
தானியேல் 2
39. …. பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்
வெண்கலம் - வயிறும் தொடையும். கிரேக்கராஜ்யம் . கி.மு. 331 முதல் 168 வரை .
- மகா அலேக்சாந்தர் அர்பெல்லா யுத்தத்தில் ( கி.மு. 331) தரியுவை வென்று , 12 வருடங்களில் இந்தியாவரையுள்ள நாடுகளை கைப்பற்றினான். தானியேல் 10:20
கால்கள் இரும்பு:
தானியேல் 2 : 40. நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்
இரும்பு கால் - ரோம ராஜ்யம் . கி.மு. 168 முதல் கி.பி. 351 வரை .
- இயேசுவின் காலத்திலிருந்த உலக சாம்ராஜ்யம் .
பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்:
தானியேல் 2 :
41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
பத்துப்பிரிவுகள் - பாதவிரல்கள் . தானியேல் 2:41,42.
1. நாலாவது ராஜ்யமான ரோமசாம்ராயம் பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. கி.பி. 351 - 476 வரை ,
(1) அல்மானி - ஜெர்மனி .
(2) விசிகாத்ஸ் - ஸ்பெயின் .
(3) பிராங் - பிரெஞ்ஸ் .
(4) சூவி - போர்ச்சுக்கல் .
(5) பார்கண்டியன் - சுவிட்சர்லாந்து .
(6) ஆங்கிலோ சாக் ஷன்ஸ் - இங்கிலாந்து .
(7) லம்பார்ட்ஸ் - இத்தாலி .
(8) ஹெருளி - கி.பி. 493 .
(9) வாண்டல்ஸ் - 534.
(10) ஆஸ்திரகாத்ஸ் - 538.
(குறிப்பு:- இந்த கடைசி மூன்று ராஜ்ஜியமும் இப்போது இல்லை.
மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில் சின்ன கொம்புவால் பிடுங்கப்பட்டது தானியேல் 7:7,8. )
2. சில உரமானவை சில உரமற்றவை. தானியேல் 2:42.
உலக ராஜ்யங்களை ஒன்றாக்க முயற்சி :-
1. ஒருவரோடொருவர் ஒட்டிக் கொள்ளாதிருப்பார்கள் . தானியேல் 2:45. உலகம் முழுவதையும் ஆளும் ஒரே ராஜ்யம் உண்டாகாது என்பது தரிசனம் .
2. ஒன்றாக்க முயற்சித்து ஏமாந்து போனவர்கள் .
- 8வது நூற்றாண்டில் சார்லமேன் .
- 16வது நூற்றாண்டில் 5-ஆம் சார்லஸ் .
- 18வது நூற்றாண்டில் 14-ஆம் லூயி .
- 19வது நூற்றாண்டில் நெப்போலியன் .
- 20வது நூற்றாண்டில் வில்லியம் கெய்சர் (1ம் உலகயுத்தம் )
- 20வது நூற்றாண்டில் அடால்ஃப் ஹிட்லர் (2ம் உலகயுத்தம் )
3. சமாதான உடன்படிக்கைகளாலும் முடியவில்லை .
4. ஜாதிகளின் உறவு சங்கத்தாலும் முடியவில்லை .
5. சம்மந்தங்கலந்தார்கள் . தானியேல் 2:43. அதனாலும் பயனில்லை ...
கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்:
தானியேல் 2: 44. அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
உலக முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
1. உலகம் முழுவதையும் ஆளக்கூடிய திறமையான தலைவர்
- தப்பிதமே செய்யக் கூடாதவர் - ஒர் அற்புத நாதன் .
2. கல் இயேசுவையே குறிக்கும் .
3. இவரே பூமிக்கு உரிமையாளர் . எசேக்கியேல் 21:25,27.
- சிருஷ்டிப்பினாலும்
- மீட்பினாலும்
4. பூலோக ராஜ்யங்கள் கிறிஸ்துவின் ராஜ்யமாகும் . வெளி 11:15.
5. இதுவே நித்திய ராஜ்யம் .
6. "இந்த இராஜாக்களின் நாட்களிலே " இயேசு ராஜா வருவார்