top of page

நரகம்என்றால் என்ன???


ஜனங்களின் பொதுவான அபிப்பிராயம் .


1. பாவிகள்நித்தியகாலமாய் எரிந்து கொண்டேயிருக்கும் ஒரு இடம்தான் நரகம். இந்த தீப்பிழம்புகள்மனிதனை அழிப்பதில்லை. ஆனால் பாவிகள்ஒருவனும் தப்பிக்கவும் முடியாது.


2. இவ்விதமான தவறானகோட்பாடுகள் தேவனின் குணாதிசயத்தைப் பாதிக்கின்றது. பலர் நாஸ்திகர்களாக ஆகியிருக்கிறார்கள்.உதாரணம்: நரகத்தைப்பற்றிய தவறான கொள்கைகள்.


3. வேதவாக்கியங்கள்ஒன்றுக்கொன்று முரண்படாதவை அவைகளை ஆராய்வது அவசியம். 1 கொரி2:13, ஏசா33:16.


கிறிஸ்துவின்போதனை ..


1. கை, கால், கண் இவைகளோடு நரகத்தில்தள்ளப்படுவார்கள்.மாற்கு9:43-48.


2. "சரீரம் முழுவதும்நரகத்தில் தள்ளப்படும்" வெறும் ஆவியல்ல. மத்5:30.


3. உலக முடிவில் பாவிகள்அக்கினியில் தள்ளப்படுவர் - மரித்தவுடனே அல்ல . மத்13:38-42.


4. சரீரமும் ஆத்துமாவும்அழிந்துபோம் - முடிவில்லா காலமாய் வாதிக்கப்படும் என்றல்ல. (தேவனுடைய நெருப்புவல்லமையுடையது ) மத்10:58.


நியாயத் தீர்ப்புக்குப் பின் நரகம்.


1.மரித்தவுடன்நரகத்துக்கு அனுப்பி, அனேக ஆண்டுகளுக்குப்பின் திரும்ப அந்த பாவியைநரகத்திலிருந்து எடுத்து தேவன் நியாயம் தீர்ப்பார் என்பது நியாயத்துக்கு பொருந்தாது.


2. தண்டனை எப்போதும்நியாயத் தீர்ப்புக்குப் பின்னரே.


3.பாவிகள் நியாயத்தீர்ப்புக்கென்று, கல்லறைகளில் இரண்டாம்உயிர்த்தெழுதல் வரைக்கும் வைக்கப்பட்டிருக்கின்றன. 2 பேதுரு2:9.. யோவா 5:28.29.


கிறிஸ்துவின்இரண்டாம் வருகைக்கு பின்னரே நரகம்.


1.நரகத்திலே பாவிகள் இரண்டாம் மரணமடைகின்றனர் வெளி21:8


2. இரண்டாம்உயிர்த்தெழுதலில் பங்கு அடைய பாவிகளுக்கே இரண்டாம் மரணம் கிடைக்கிறது. வெளி 20:9.

  • கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பரிசுத்தவான்களின் முதலாம் உயிர்த்தெழுதல் நடைபெறுகிறது.1 தெச4:16.17, வெளி20:6.

  • பின்பு ஆயிர வருட அரசாட்சி. - ஆயிர வருட முடிவிலே இரண்டாம் உயிர்த்தெழுதல்

  • பாவிகளுக்காக வெளி 20:7.8

  • பின்பு அக்கினிவருஷிக்கப்பட்டு, பாவிகள் முழுவதும் அழிக்கப்பட்டுகின்றனர். சகரி14:12. வெளி 20:8-9. எபி12:29. 


3. இந்த அக்கினி பூமியில் இறங்கும்போது பூமியே அக்கினிக் கடலாக நரகமாக மாறுகிறது. 2பேதுரு 3:10, வெளி 20:10.15, 21:8.


நரகம்எவ்வளவு காலம் ???


1. முடிவில்லாத காலமல்ல. அக்கினிக் கடலாக - நரகமாக இருந்த பூமி, புதிய பூமியாக மாறிவிடுகிறது . வெளி20:1-5. 2பேதுரு 3:12.13. 2.


அவியாத அக்கினி என்றால் என்ன??


மாற்கு 9:43. - எருசலேமைக் கொளுத்தின அக்கினி போல, தன் வேலையை முடிக்கும் வரை அவித்துப்போட முடியாது.


எரே17:27. 2நாளா36:19.21. 3. சாவாத புழு: முழுஅழிவைக் குறிக்கும் ஏசா 66:24. 4.


நித்திய அக்கினி என்றால் என்ன?? மத் 25:41.


  • சோதோம் கொமோராவைஅழித்த அக்கினி போல யூதா7.

  • அவை சாம்பலாயிற்று. 2 பேதுரு 2:6,.யூதா 7.

  • நித்திய அழிவை -நித்திய மரணத்தை உண்டாக்குவதால் நித்திய அக்கினி என்று அழைக்கப்படுகிறது.


என்றென்றைக்கும் ' என்பதின் அர்த்தம் என்ன??


வெளி 20:10. - 'உயிருள்ள நாள்வரைக்கும்' என்பது பொருள் -உதாரணம்: 2 ராஜா 5:27, யாத்தி 21:6.


நித்தியஅழிவுதான் நரகம் ..


1. நித்திய தண்டனை -நித்திய அழிவே


2. பரிசுத்தவான்களுக்குநித்திய ஜீவன், பாவிகளுக்கு நித்திய மரணம் . (வேதனையோடு நித்தியமாக வாழ்வதுஅல்ல. ரோமர் 6:23. 1யோவா5:12.


3. பாவிகள் வேறும்கொப்பும் வைக்கப்படாமல் அழிந்து சாம்பலாக்கப்பட்டு பூமிக்கு உரமாவார்கள். மல்கி4:1-3.


இருவழிகள் தான் உண்டு . மத்தே 7:13,14.


1. கேட்டுக்குப் போகும்வழி விசாலம்.


2. ஜீவனுக்குப் போகும்வழி இடுக்கம் - நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள்?? எபி 2:4.


3. நரகம்பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது . நமக்காக அல்ல .மத்தே 25:41.

நாம் அதில் பங்குபெற வேண்டாம் என்று தேவன்விரும்பி, அதற்கான சகல உதவிகளையும் செய்திருக்கிறார் .யோவா3:16.


4. ஆனால் பாவிகள் கிறிஸ்துவின் அன்பை அறியாமல், அறிந்தும் தாமாகவே (நரகத்தில்) அதில் பங்கு பெறுகின்றனர். வெளி 21:8., 2 பேதுரு2:20-22,. சங்கீ11:6. 9:17.


5. தேவனுடைய கடைசிஅழைப்பை ஏற்றுக்கொள் ஒருவரும்கெட்டுப்போவது தேவ சித்தமல்ல . எசே 18:23.30-32, மத்18:14.


கிறிஸ்து சிலுவையில் நாம் செய்த பாவத்திற்கான(நரகத்தை) தண்டனைஏற்றுக்கொண்டார், ஆதலால் இயேசுவை விசுவாசிப்பவர் நரகம் போவதில்லை. ஆமென்.

bottom of page