top of page

நரகம் - எங்கிருக்கிறது?


சிந்திக்க:  ஆண்டவர் உலகத்தை படைத்த உடன் நரகத்தையும் படைதாரா?


1. எத்தனை மரித்த ஆத்துமாக்கள் நரகத்தில் தண்டனை அனுபவித்து கொண்டு (அ) எரிந்து கொண்டு இருக்கிறது?


II பேதுரு 2

9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று   இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக் குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு   வைக்கவும் அறிந்திருக்கிறார்.


யோவான் 12: 48

48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.


2. எப்போது துன்மார்க்கர் நரகத்தில் தள்ளப்படுவார்கள் ?


மத்தேயு 13:


40. ஆதலால், களைகளைச் சேர்த்து   அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.


41. மனுஷகுமாரன் தம்முடைய   தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்   செய்கிறவர்களையும் சேர்த்து,


42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.


3. அப்படியானால் மரித்த துன்மார்கர் எங்கே இருக்கிறார்கள் ?


யோவான் 5:


28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள   அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;


29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும்,   தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.


யோபு 21: 30, 32


30. துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.


32. அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.


4. பாவத்தின் முடிவான (அ) கடைசியான விளைவு என்ன ?


யாக்கோபு 1: 15

15. பின்பு இச்சையானது   கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.


யோவான் 3: 16

16. தேவன், தம்முடைய ஒரேபேறான   குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,   அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.


ரோமர் 6:23

23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.


ஆதியாகமம் 3:22


22. பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,


இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு மறித்து உயிர்த்தார். தேவனுடைய பிள்ளைகள் அவரோடு நித்தியமாக வாழ்வார்கள் என்பதை குறிக்கிறது.


5. நரகத்தில் துன்மார்க்கருக்கு என்ன நடக்கும்?


சங்கீதம் 37:10, 12

10. இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை   உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை


12. துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில்   பற்கடிக்கிறான்


மல்கியா 4:1,3

1.இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


3. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


வெளி 21: 8

8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.


6. எங்கே, எப்போது, எப்படி நரகம் ஆரம்பிக்கும்?


மத்தேயு 13: 40-42


40. ஆதலால், களைகளைச் சேர்த்து   அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.


41. மனுஷகுமாரன் தம்முடைய   தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்   செய்கிறவர்களையும் சேர்த்து,


42. அவர்களை அக்கினிச்   சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.


வெளி 20: 9

9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.


7. நரகம் எவ்வளவு பெரியது? எவ்வளவு சூடாக இருக்கும்?


II பேதுரு 3: 10

10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய்   வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம்,   பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.


வெளி 20: 14, 15

14. அப்பொழுது மரணமும்   பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்


8. எவ்வளவு காலம் துன்மார்கர் நரகத்தில் துன்பப்படுவார்கள்?


நித்தியகாலமாக :


வெளி 22: 12

12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்;   அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.


மத்தேயு 16: 27

27. மனுஷகுமாரன் தம்முடைய   பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன்   கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.


லூக்கா 12: 47, 48

47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்


48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்


மத்தேயு 10: 28

28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


9. நரகத்தின் நெருப்பு ஒரு நாள் இல்லாமல் போகுமா?


சங்கீதம் 37: 10, 20

10. இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை   உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.


20. துன்மார்க்கரோ அழிந்து போவார்கள்,  கர்த்தருடைய சத்துருக்கள்   ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.


ஏசாயா 47: 14

14. இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.


யுதா 1: 7

7. அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.


நித்தியமானது / முடிவில்லாதது (Eternal) – அந்த தீயினால் ஏற்பட்ட விளைவு நிதியமானது


வேதத்தில் நித்திய நித்தியமாக (“forever and ever”):

அதனுடைய முடிவு இருக்கும் வரை. அது முடிவில்லாதது அல்ல. யோனா 2:6


நித்தியமாக (Forever): நித்தியமானது என்பதற்கு என்றென்றுமானது பொருள்


யாத்திராகமம் 21: 6

6. அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.


I சாமுவேல் 1: 22

22. அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்த பின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.


I சாமுவேல் 1: 28

28. ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக்கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.


10. நெருப்பு போன பிறகு என்ன மிஞ்சி இருக்கும்?


மல்கியா 4: 3

3. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள்   உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


ஏசாயா 47: 14

14. இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்;   அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க   தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல


II பேதுரு 2: 6

6. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;


11. நரகத்தில் துன்மார்கர் சரீரத்தில் சென்று ஆத்துமாவும், சரீரமும் அழிக்கப்படுமா?


மத்தேயு 10: 28

28. ஆத்துமாவைக் கொல்ல   வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; 

 ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


மாற்கு 9: 47, 48

47. உன் கண் உனக்கு இடறல்   உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது   உனக்கு நலமாயிருக்கும்.

48. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.


மத்தேயு 3:12

12. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.


எரேமியா 17:27

27. நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


மத்தேயு 5:30

30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.


எசேக்கியேல் 18: 20

20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.


12. சாத்தான் நரகத்தை பொறுப்பேற்று நடத்துவானா?


வெளி 20: 10

10. மேலும் அவர்களை   மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய  அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும்   சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.


எசேக்கியேல் 28: 18, 19

18. உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

19. ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.


வெளி 20:15

15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.


13. "நரகம்" என்ற வார்த்தை எப்போதுமே எரிய கூடிய இடத்தை தான் குறிக்கிறதா?


sheol, Gehenna, Tarterus, hades - என்பவைகள் தான் மூல வார்த்தை. அதன் பொருள் என்ன?


sheol - , Gehenna , Tarterus - means Grave (கல்லறை)


sheol - பழைய ஏற்பாட்டில் 31 முறை "கல்லறை' என்பதை குறிக்கிறது


Gehenna - 12 முறை - எரியக்கூடிய இடம் என்பதை குறிக்கிறது

Tarterus - 1 முறை - இருட்டான இடம் என்பதை குறிக்கிறது


hades - புதிய ஏற்பாட்டில் 10 முறை (grave ) "கல்லறை' என்பதை குறிக்கிறது


மொத்தமாக 54 முறை "கல்லறை" என்பதை தான் குறிக்கிறது


14. "நரகம்" என்பதில் தேவனுடைய உண்மையான நோக்கம் என்ன?


மத்தேயு 25: 41

41. அப்பொழுது, இடதுபக்கத்தில்   நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும்  அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.


வெளி 20: 9

9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.


15. அழிக்க கூடியது என்பது தேவனுடைய குணத்திற்கு எதிரான குணம் இல்லையா?


ஆம்


லுக்கா 9: 56

56. மனுஷகுமாரன் மனுஷருடைய   ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள்   வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.


யோபு 4: 17

17. மனுஷன் தேவனைப்பார்க்கிலும்   நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?


2 பேதுரு 3: 9

9. தாமதிக்கிறார் என்று   சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத்   தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி,   நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.


ஏசாயா 28: 21

21. கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.


எசேக்கியேல் 33: 11

11. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.


16. நரகத்திற்கு பிறகு இந்த பூமிக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் உள்ள தேவனின் திட்டம் என்ன?


நாகூம்   1

9. நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச்   செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும்   உண்டாகாது.


ஏசாயா 65: 17

17. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.


வெளி 21

3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

bottom of page