10 கட்டளைகள் -பாகம் 3
தேவன் மனுக்குலத்திற்கு ஒழுக்கத்தோடு வாழ்வதற்காக கொடுக்கப்பட்டதே இந்த 10 கட்டளைகள். 10 கட்டளைகளாக தேவன் கற்பலகையில் தனது சொந்த விரலினால் எழுதி கொடுத்தார். 10 கட்டளைகள் சீனாய் மலைக்கு முன் இருந்ததா என்றால் இருந்திருக்கிறது.
உதாரணமாக
யோசேப்பு, போத்திபார் வீட்டில் இருக்கும் போது போத்திபார் மனைவி அவளோடு விபச்சாரம் செய்யும்படி அழைத்தாள்.யோசேப்பின் பதிலோ அருமையானவை...
ஆதியாகமம்39:
8. அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
9. இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
யோசேப்பு"தேவனுக்கு விரோதமாக பாவம் செவிவது எப்படி" என்று கேட்டாரென்றால், யோசேப்பிற்கு விபச்சாரம் ஒரு பாவம் என்று தெரிந்திருக்கிறது.
மற்றொரு உதாரணத்தை பாப்போம்...
காயின் தன சகோதரனை கொன்று விட்டான்.
ஆதியாகமம்4
8. காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
9. கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
கர்த்தர் காயீனிடம் ஆபேலை பற்றிய் கேட்கும்போது, "நான் அறியேன்" என்றே சொன்னான்.
13. அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.
14. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
கொல்லுதல் பாவம் என்று காயீன் அறிந்திருந்தான்.
மற்றொரு உதாரணத்தை பாப்போம்
பரிசுத்த ஓய்வு நாள்
யாத்திராகமம் 16
23. அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
26. ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.
பரிசுத்த ஓய்வு நாளும் கூட, 10 கட்டளைகள் கொடுப்பதற்கு முன்பாக இருந்தது , மக்களும் அனுசரித்தார்கள் நாம் பார்க்கலாம்.
இப்படி தேவனின் 10 கட்டளைகளை, சீனாய் மலையில் கொடுக்கும் முன்பு அவைகள் இருந்தது என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் சீனாய் மலையில், தேவன் 10 கட்டளைகள் வடிவில் தன்னுடைய சொந்த விரலால் எழுதி கொடுத்தார்.
இந்த 10 கட்டளைகளை நியாயப்பிரமாணம் என்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. இவைகள் மனுக்குலம் ஒழுக்கமாக வாழ்வதற்கு கொடுக்கப்பட்டதால், இதனை ஒழுக்க பிரமாணம் என்றும் சொல்லலாம்.
1. பாவம் என்றால் என்ன?
1 யோவான் 3
4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
தேவனுடைய10 கட்டளைகளை மீறுகிறது பாவம் என்கிறது வேதம்
2. பாவத்தை பற்றி அறிகிற அறிவு மனிதனுக்கு எப்படி வருகிறது?
ரோமர் 3
20. இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
கட்டளைகள், அதாவது ஆங்கிலத்தில் laws என்பார்கள். laws இல்லை என்றால் எது தவறு என்று எப்படி தெரியும்? அது போல 10 கட்டளைகள் இல்லை என்றால் பாவம் எது என்பது எப்படி தெரியும்? என்று கேட்கிறது வேதம். அதனால் தேவனுடைய கட்டளைக முக்கியம். அதுவே நம்மை பாவத்தில் இருந்து பாதுக்காக்கும்
3. நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டிருப்பதால் நியாயப்பிரமாணத்தை மீறலாமா?
ரோமர் 6
14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
15. இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.
நாம் உயிரோடு வாழ்வது தேவனுடைய கிருபை, நாம் சுகத்தோடு இருப்பதும் தேவனின் கிருபை. பாவத்தில் இருக்கும் நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விட்டால் நியாயப்பிரமாணத்தை மீறலாமா? மீறக்கூடாது என்கிறது வேதம், ஏனென்றால் நியாயப்பிரமாணத்தை மீறுவது பாவம்.
ரோமர் 3
31. அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
இப்படி தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போது தேவனுடைய கட்டளையை தூக்கிப்பிடிக்கின்றோம்.
4. நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் எது பாவமென்று எப்படி பாவம் என்று தெரியும்?
ரோமர் 7
7. ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
12. ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
5. இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு நியாயப்பிரமான(அ) 10 கட்டளைகள் ஒழிந்து விட்டதா? 10 கட்டளைகள் ஒளிந்து விட்டது என்று இயேசு சொன்னாரா?
மத்தேயு5
17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வானமும் பூமியும் அழிந்தாலும் தேவனின் கட்டளைகள் அழியப்போவதில்லை. அதாவது தேவனின் வார்த்தைகள் நித்தியமானது என்பதை இயேசு கிறிஸ்து சொல்கிறார்.
6. இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை(அ) 10 கட்டளைகளை கைக்கொள்ள சொன்னாரா?
மத்தேயு 22
36. போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான கற்பனை.
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
இயேசு கிறிஸ்து சொன்ன முதலாம் கற்பனை, 10 கட்டளையில் உள்ள 4 கட்டளைகளை சுட்டிக்காட்டுகிறது.
இயேசு கிறிஸ்து சொன்ன இரண்டாம் கற்பனை, 10 கட்டளையில் உள்ள கடைசி 6 கட்டளைகளை சுட்டிக்காட்டுகிறது.
இதனை தான் இயேசு கிறிஸ்து முதலாம் கற்பனையை "தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்பு கூறுவாயாக" என்று கூறுகிறார்.
இரண்டாம் கற்பனையை "பிரானிடத்தில் அன்பு கூறு" என்கிறார்
இந்த 10 கட்டளைகள் இல்லை என்றால், தேவனையும் மனிதனையும் எப்படி அன்பு கூறுவது என்று எப்படி தெரியும்?
7. அன்பு தான் 10 கட்டளையா?
மத்தேயு 22
37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான கற்பனை.
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
முதலாம் கற்பனை : 10 கட்டளைகளில் உள்ள முதல் நான்கு கட்டளைகளும் மனிதன் தேவனை அன்பு செய்வதாம்
இரண்டாம் கற்பனை: 10 கட்டளைகளில் உள்ள கடைசி ஆறு கட்டளைகளும் மனிதன் மனிதனை அன்பு செய்வதாம்
இயேசு கிறிஸ்து இப்படியாக சொன்னார்…
மத்தேயு 19
18. அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
19. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.
8. கட்டளைக்கு அன்பிற்கும் உள்ள தொடர்பு என்ன?
அன்பே = கட்டளை
கட்டளை= அன்பு
I தீமோத்தேயு1 : 5. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
அதாவது கட்டளையின் பொருள் அன்பே என்று பவுலர் தெளிவாக விளக்கி கூறுகிறார்
I யோவான் 5
3. நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
ரோமர் 13
9. எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
10. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
அன்பின் மாரு உருவம் தான் கட்டளை என்று வேதம் சொல்கிறது. அதாவது, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது நாம் அன்பு கூறுவதாகும்.
9. இயேசு கிறிஸ்து அன்பை பற்றி(அ) 10 கட்டளைகள் என்ன சொல்லி இருக்கிறார்?
யோவான் 14
15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
நான் இயேசுவிடம் அன்பாயிருக்கிறேன் என்பவன் அவர் சொன்ன கட்டளைகளை கைக்கொள்ளுவான்.
10. மனிதன் மேல் விழுந்த கடமை எது?
பிரசங்கி 12
13. காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
11. 10 கட்டளைகள் நித்திய ஜீவனை பெற வழிநடாத்துமா?
மத்தேயு 19
17. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
வெளி 22
14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
12. 10 கட்டளைகளை கைக்கொள்ளாமல் தேவனையாவது மனிதனையாவது அன்பு செய்கிறேன் என்று சொல்ல முடியுமா?
இயேசு கிறிஸ்து இப்படியாக சொன்னார்...
யோவான் 14
15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
I யோவான் 2
4. அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
இயேசுவை அறிந்திருந்தால் மட்டும் போதாது, அவருடைய கற்பனைகளை தெரிந்திருந்தால் மட்டும் போதாது, அந்த10 கட்டளைகளை கைக்கொள்ளும் போது தேவனையும் மனிதனையும் அன்பு செய்கிறோம்
13. 10 கட்டளைகள் பாரமா?
I யோவான் 5
3. நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
14. 10 கட்டளையில் ஒரு கட்டளை மீறினால் பாவமா? அதாவது 9 கட்டளைகளை கைக்கொண்டு ஒரு கட்டளையை மீறினால் பாவமா?
யாக்கோபு 2
10. எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
11. ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
10 கட்டளையில் ஒரு கட்டளையை மீறினாலும் பாவம் என்கிறது வேதம்.
உதாரணமாக, நான்காம் கட்டளையாகிய ஓய்வு நாள் கட்டளையை எடுத்துக்கொள்வோம். ஓய்வு நாள் வாரத்தின் ஏழாம் நாள், அதாவது இன்றைய நாளின் பெயர் படி "சனிக்கிழமை". மாலை முதல் மாலை வரை ஒரு நாள் என்கிறது வேதம். (இதை பற்றி அறிய "வேதம் சொல்லும் ஓய்வு நாள் எது" என்ற பகுதியை படிக்கவும்). அதாவது வெள்ளி கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை ஒருநாள், அதாவது பரிசுத்த ஓய்வு நாள். அதனை செய்யாமல், மற்ற ஒன்பது கட்டளைகளும் கைக்கொண்டாலும், ஒரு கட்டளையை மீனாதால் பாவம் செய்கிறோம் என்கிறது வேதம்.