top of page

1000 வருட அரசாட்சி


1. 1000 வருட அரசாட்சியின் துவக்கம்


ஆயிரம் வருட அரசாட்சி எபோது துவங்கும்?


வெளி - 20: 4 - "இயேசு கிறிஸ்து, இரண்டாம் முறை வரும்போது மரித்த பரிசுத்த வாங்கல் உயிரோ எழுப்புகின்றனர், உயிரோடு இருக்கு பரிசுத்தவான்களையும் பரலோகம் கூடி சேர்கிறார். 1000 வருட அரசாட்சியின் தொடக்கம் இது"


முதல் உயிர்தெழுதல் எப்போது நடக்கும்?


1 தெசலோனிக்கேயர் - 4: 16 - "இயேசு கிறிஸ்து, வரும்போது மரித்த பரிசுத்தவான்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்"



a. மரித்த பரிசுத்தவான்களின் நிலைமை


யோவான் - 11: 23, 24 - "இயேசு கிறிஸ்து, வரும்போது உயிர்த்தெழுதல் உண்டு, அது உண்மை என்று மார்த்தாலும் ஊர்ஜிதப்படுத்துகிறாள் "


யோவான் - 5: 28, 29 - "இயேசு கிறிஸ்து, வரும்போது மரித்த பரிசுத்தவான்கள் அவரின் சத்தத்தை கேட்பார்கள் "


வெளிப்படுத்தல் - 20: 6 - "இயேசு கிறிஸ்து வரும்போது நடப்பது முதலாம் உயிர்த்தெழுதல். அவன் தான் பாக்கியவான் "


பாக்கியவான் யார் ?


வெளிப்படுத்தல் - 14: 13 - "மரித்தவர்களில் மரிக்கிறவர்களில், கர்த்தருக்கு  மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்"


பரிசுத்தவான் யார் ?


வெளிப்படுத்தல் - 14: 12 - "தேவனுடைய கற்பனைகளாகிய 10 கற்பனைகளையும், யேசுகிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்கள் பரிசுத்தவான்கள்"


b. உயிரோடு இருக்க கூடிய பரிசுத்தவான்கள் நிலைமை


1 தெசலோனிக்கேயர் - 4:17 - "இயேசு கிறிஸ்து வருகையில் உயிரோடு இருப்பவர்கள் மறுரூபாமாவார்கள். மரித்த பரிசுத்தவான்கள் எழுப்பப்படும், உயிரோடு இருக்கும் தேவா ஜனம் மறுரூபமாக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவோடு எப்போதும் இருப்பார்கள் "


1 கொரி - 15: 51 - "இயேசு கிறிஸ்து வரும்போது, உயிரோடு இருக்கும் பரிசுத்தவான்கள் மறுரூபம் ஆவார்கள்"


பரலோகத்தில் இயேசு கிறிஸ்துவுடன் தேவஜனங்களோடு ஆயிர வருட அரசாட்சி தொடங்குகிறது 



c. மரித்த துன்மார்க்கர் நிலைமை


வெளிப்படுத்தல் - 20: 5  - "துன்மார்க்கர் இயேசு கிறிஸ்து வரும்போது மரித்து விடுகிறார்கள். அவர்கள் ஆயிரம் வருடம் முடியும் அளவும் உயிர் அடையவில்லை"


2 தெசலோனிக்கேயர் - 1:7-10 - "தேவனை அறியாதவர்கள், தேவனுக்கு கீழ்ப்படியாதவர்கள் தண்டனை அடைவார்கள்"


2 தெசலோனிக்கேயர் - 2:7,8 - "அந்திகிறிஸ்துவும் இயேசு கிறிஸ்துவின் வருகையினால் அழிக்கப்படுகிறான்"


ஏசாயா - 11:4 "தேவன் தமது வார்த்தை என்னும் கோலால், தமது சுவாசத்தால் துன்மார்க்கரை சங்கரிப்பார்  "


ஏசாயா - 30:33 - "தேவனுடைய சுவாசம் கந்தக தீயை போல கொளுத்தும் "


எரேமியா - 25: 31-33 - "துன்மார்க்கரை பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பார் "


d. உயிரோடுள்ள துன்மார்கரின் நிலைமை


சங்கீதம் 68: 1-2 - "மெழுகை போல துன்மார்க்கர் தேவனுக்கு முன் அழிவார்கள்  "


e. சாத்தானின் நிலைமை என்ன?


வெளிப்படுத்தல் - 20: 2 - "சாத்தானும் கூட 1000 வருடங்கள் இந்த பூமியில் சூழ்நிலை என்னும் சங்கிலியால் கட்டப்படுகிறான். துன்மார்க்கர் மறித்து விட்டதினால், அவர் யாரையும் வஞ்சிக்க முடியாமல் இந்த பூமியில் கட்டப்பட்டு கிடக்கிறான் "


2. ஆயிரம் வருட அரசாட்சியின் போது…


பரலோகத்தில் பரிசுத்தவான்கள் என்ன செய்வார்கள்?


2 பேதுரு - 2: 4 - "பாவம் செய்த தூதர்கள் நியாத்தீர்ப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றனர்"


1 கொரி - 6:2, 3 - "உலகத்தையும், தூதர்களையும் நியாயத்தீர்ப்பு செய்யும் வேலையை பரிசுத்தவான்கள் பரலோகத்தில் செய்கின்றனர்"



மத்தேயு - 19: 27, 28 - "நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேலையை தேவன் பரிசுத்தவான்களுக்கு கொடுக்கிறார்"



சங்கீதம் - 149:4-9

4. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.


5. பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.


6. ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும்,


7. அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,


8. அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.


9. இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். (அல்லேலூயா.)


பரலோகத்தில் பரிசுத்தவான்கள் தேவனோடு சந்தோஷமாய் இருத்தல்


வெளிப்படுத்தல் - 20


4.அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.


6.முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.


இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது மரித்த துன்மார்க்கர் நிலைமை


வெளிப்படுத்தல் - 20

5.மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.


இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது உயிருள்ள துன்மார்க்கர் மரித்து விட்டார்கள்


2 தெசலோனிக்கேயர் - 1:7-10; 2:7,8


ஏசாயா - 11

4.நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின்கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.


ஏசாயா - 30:33

33. தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.


எரேமியா 25

31. ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


32. இதோ, ஜாதிஜாதிக்குத் தீமைபரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும்.


33. அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்

பூமியில் மனிதன் இல்லை


எரேமியா 4

23. பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.


24. பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.


25. பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.


3. ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவு...


வெளிப்படுத்தல் - 21:4-8

4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது


5. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.


6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.


7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.


8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.


மத்தேயு 5

5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.


சங்கீதம் 37

11. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.


22. அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.


34. நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.


ஏசாயா 65

17. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.


18. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.


19. நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.


25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.


புதிய எருசலேம் இறங்கி வருதல்


வெளி 21

1. பின்பு, நான்   புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும்   ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.


2. யோவானாகிய நான்,   புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு   இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல   ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.


மரித்தவர்கள் உயிர் பெறுகிறார்கள்


வெளி 20

5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம்   முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.


7. அந்த ஆயிரம்   வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,


8. பூமியின் நான்கு   திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை   யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை   கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.


சாத்தான் அவனுடைய கூட்டத்தை கூட்ட அதிகாரம் கொடுக்கப் படுகிறது. அவர்கள் அக்கினியினால் அழிக்கப்படுகிறார்கள்


வெளி 20

9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.


10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.


11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.


12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.


13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.


14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.


15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.


வெளி 19

20. அப்பொழுது   மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின்   முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின   கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற   அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.


வெளி21

8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.


எவ்வளவு காலம் இந்த பூமி எரியும்? அல்லது எரிந்து கொண்டே இருக்குமா?


மல்கியா 4

1. இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின்கர்த்தர் சொல்லுகிறார்.

2. ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.


3. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

புதிய வானம் புதிய பூமி


ஏசாயா 65 (full)


புதிய வானம் புதிய பூமியில் என்ன நடக்கும்?


ஏசாயா 66

21. அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

22. நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

23. அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர்சொல்லுகிறார்.


வெளி 22

2. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.


தொகுப்பு: ஆயிரம் வருட தொடக்கத்தில் உள்ள நிகழ்வுகள்


1. பயங்கரமான பூமி அதிர்ச்சியும், இயற்கை சீற்றங்களும் (வெளி 16: 18-21, வெளி 6: 14-17)

2. நீதிமாங்களுக்காக தேவனுடைய வருகை (மத்தேயு 24: 30, 31)

3. மரித்த பரிசுத்தவான்கள் உயிரோடு எழுப்பப்படுகின்றனர் (1 தேச 4: 16, 17)

4. பரிசுத்தவான்களுக்கு நித்தியவாழ்வு (1 கொரி 15: 51-55)

5. பரிசுத்தவான்களுக்கு புதிய அழிவில்லாத சரீரம் (1 யோவான் 3: 2, பிலிப்பியர் 3: 21)

6. எல்லா பரிசுத்தவான்களும் மேகத்தில் சந்திக்கின்றனர் (1 தேச 4: 16, 17)

7. தேவனுடைய சுவாசத்தினால் உயிரோடிருக்கும் துன்மார்கர் அழிவு (ஏசாயா 11: 4)

8. மரித்த துன்மார்க்கர் 1000 வருடம் முடிவது வரை எழும்புவதில்லை (வெளி 20: 5)

9. இயேசு கிறிஸ்து பரிசுத்தவான்களை பரலோகம் கூட்டி செல்கிறார் (யோவான் 13: 33, 36; 14:1-3)

10. சாத்தான் காட்டப்படுகிறான் (வெளி 20: 1-3)


தொகுப்பு: 1000 வருடத்தின் போது


1. உலகம் நிலை குலைந்து போகிறது (வெளி 16: 18- 21; 6: 14-17)

2. உலகம் ஒழுங்கிலாமல் இருக்கிறது (எரேமியா 4: 23, 28)

3. சாத்தானும் அவனது தூதர்களும் இந்த உலகத்தில் கட்டப்படுகின்றனர் (வெளி 20: 1-3)

4. நீதிமான்கள் நியாயம் தீர்க்க பங்கு கொள்கின்றனர் (வெளி 20: 4)

5. துன்மார்க்கர் அழிக்கப்படிருக்கின்றனர் (எரேமியா 4: 25; ஏசாயா 11: 4)


தொகுப்பு: 1000 வருடத்தின் முடிவில்...


1. இயேசு கிறிஸ்துவின் மூன்றாம் வருகை (சகரியா 14: 5)

2. பரிசுத்த நகரம் ஒலிவ மலையில் இறங்கி வருதல். எல்லோராலும் அதை பார்க்க முடியும் (சகரியா 14: 4, 10)

3. பிதா, தேவதூதர்கள் மற்றும் எல்லா பரிடுத்தவாங்களும் இயேசு கிறிஸ்துவோடு இறங்கி வருதல் (வெளி 21: 1-3, மத்தேயு 25: 31, சகரியா 14: 5)

4. மரித்த துன்மார்கர் உயிரோடு எழுந்திருத்தல். சாத்தான்  தோற்று போகிறான் (வெளி 20: 5,7)

5. சாத்தான் மொத்த உலகத்தையும் வஞ்சிக்கிறான் (வெளி 20: 8)

6. துன்மார்கர் பரிசுத்த நகரத்தை சுற்றி வளைகின்றனர் (வெளி 20: 9)

7. துன்மார்க்கர் தீயினால் எரிகின்றனர் (வெளி 20: 9)

8. புதிய வானம், புதிய பூமி உருவாக்கப்படுகிறது (ஏசாயா 65: 17, 2 பேதுரு 3: 13, வெளி 21: 1)

9. தேவனுடைய பிள்ளைகள் புதிய பூமியையும், பரலோகத்தையும், நித்தியத்தையும் அனுபவிக்கின்றனர் (வெளி 21: 2-4)

bottom of page