top of page

148. துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன்

உந்தன் நாம மகத்துவங்களை

இயேசுவே இரட்சகர்

உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்!


தினந்தோறும் உம் தானங்களால்

நிறைத்திடுமே எங்களை நீர்

திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே

கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்!


அலைமோதும் இவ்வாழ்க்கையிலே

அனுகூலங்கள் மாறும்போது

வழிகாட்டிடுமே துணை செய்திடுமே

கனிவோடடியார்களை காருண்யத்தால்

bottom of page