top of page
16. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்த கடைசி காலத்திலே,
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே
ஏழாம் தலைமுறை ஏனோக்குரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
- இயேசு கிறிஸ்து வருகின்றார்
எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்,
கல்வாரி சிலுவை அன்புருவாய்,
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
- இயேசு கிறிஸ்து வருகின்றார்
கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்,
கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
- இயேசு கிறிஸ்து வருகின்றார்
bottom of page