top of page

173. கர்த்தாவின் ஜனமே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே 

களிகூர்ந்து கீதம் பாடு! 

சாலேமின் ராஜா நம் சொந்தமானார் 

சங்கீதம் பாடி ஆடு! 


அல்லேலூயா! அல்லேலூயா! (4) 


பாவத்தின் சுமையகற்றி கொடும் 

பாதாள வழி விலக்கி 

பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த 

பரிசுத்த தேவன் அவரே

- அல்லேலூயா! அல்லேலூயா! (4) 


நீதியின் பாதையிலே அவர் 

நிதம் நம்மை நடத்துகின்றார்! 

எது வந்த போதும் மாறாத இன்ப 

புது வாழ்வைத் தருகின்றாரே

- அல்லேலூயா! அல்லேலூயா! (4) 


மறுமையின் வாழ்வினிலே இயேசு 

மன்னவன் பாதத்திலே 

பசிதாகமின்றி துதி கானம் பாடி 

பரனோடு நிதம் வாழுவோம்!

- அல்லேலூயா! அல்லேலூயா! (4) 

bottom of page