top of page

24. திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும் காலத்தில்

திவ்ய காளச் சத்தம் கேட்க 

ஏசு தோன்றும் காலத்தில்

ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்;

மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடி மோட்ச லோகத்தில்

நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்


தாசர் விண்ணில் ஒன்று கூடி

தாசர் விண்ணில் ஒன்று கூடி

தாசர் விண்ணில் ஒன்று கூடி

நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்


நித்திரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறியேகுவார்

மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்,

விசுவாசிகள் எல்லோரும் விண்ணில் கூடி வாழுவார்

அந்த நாளில் நானும் கூட வாழுவேன்

- தாசர் விண்ணில் ஒன்று கூடி


யேசு நாதரின் பேன்பை எங்கும் கூறும்படிக்கே

சோர்வில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்

பின்பு, தாசர் ஒன்று கூடி தேவ சந்நிதியிலே,

நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்

- தாசர் விண்ணில் ஒன்று கூடி

bottom of page