top of page

258. இயேசுவின் நாமத்தில் இருவர் மூவர்

இயேசுவின் நாமத்தில் இருவர் மூவர் 

எவ்விடம் கூடினும் வருவேன் என்றீர்;

அந் நல் வாக்கை நம்பி அடியார் வந்தோம்.

வாரும் ஆசீர் தாரும்; உம்மை காண்பியும்.


இயேசு எங்களிடம் என்றும் பக்கமாய்

வாரும் ஆசீர் தாரும் இந்த வேளையும்.


எங்களை சந்தித்தீர் சென்ற வேளையில்,

ரட்சகா! வாருமே இத்தருணமும்;

உம் பிரசன்னம் தந்து, அருள் காண்பித்து,

அனைவரும் செய்யும் ஜெபத்தை கேளும்.


துதியின் பாடல்கள் தொனிக்க செய்யும்,

எங்கள் விசுவாசம் வளர செய்யும்;

நம்பிக்கை செழித்து, தூய அன்பு தோன்றி,

எம் பாதை ஒளிர எம் ஜெபம் கேளும்.

bottom of page