top of page
270. ஓசன்னா பாலர் பாடும்
ஓசன்னா பாலர் பாடும்
ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை, புகழ், கீர்த்தி
எல்லாம் உண்டாகவே
கர்த்தாவின் நாமத்தாலே
வருங் கோமானே, நீர்
தாவீதின் ராஜா மைந்தன்,
துதிக்கப்படுவீர்
உன்னத தூதர் சேனை
விண்ணில் புகழுவார்,
மாந்தர், படைப்பு யாவும்
இசைந்து போற்றுவார்.
உன் முன்னே குருத்தோலை
கொண்டேகினார் போலும்,
மன்றாட்டு கீதம், ஸ்தோத்திரம்
கொண்டும்மைச் சேவிப்போம்
நீர் பாடுபடுமுன்னே
பாடினார் யூதரும்
உயர்த்தப்பட்ட உம்மை
துதிப்போம் நாங்களும்.
அப்பாட்டைக் கேட்ட வண்ணம்
எம் வேண்டல் கேளுமே,
நீர் நன்மையால் நிறைந்த
காருணிய வேந்தரே
bottom of page