top of page

60. ஆவியில் அனலடைவோம்

ஆவியில் அனலடைவோம், 

ஊழியம் செய்திடுவோம் 

இயேசுவின் வருகை வெகு சமீபம் 

ஆயத்தமாகிடுவோம் 


கோடான கோடி மானிடர்கள் 

இயேசுவை அறியாமலே 

தினம் தினம் அழிகின்றாரே 

விழித்து எழுந்திடுவோம்

- ஆவியில் அனலடைவோம்


ஆவியின் வரங்களினால் நிறைந்து 

சுவிஷேசம் கூறிடுவோம் 

அழிந்திடும் ஆத்துமாக்களை 

இயேசுவுக்குள் கொண்டு வருவோம்

- ஆவியில் அனலடைவோம்


கொடுத்திடுவோம் நாம் தாங்கிடுவோம் 

நற்செய்தி ஊழியத்தை 

ஜெபித்திடுவோம், வென்றிடுவோம் 

ஆயிரம் ஆயிரமாய்.

- ஆவியில் அனலடைவோம்

bottom of page