top of page
63. பேசும் ஏசு ரட்சகா
பேசும் இயேசு ரட்சகா!
அன்பான குரலில்
நீ தனித்தல்ல என்று,
ஆன்மாவின் ஓதிடும்;
உம் சத்தம் உடன் கேட்க,
என்னுள்ளம் திறவும்;
உம் துதியால் நிரப்பும்,
உம்மில் பூரிக்கட்டும்
மெல்லிய சப்தத்தாலே
அன்போடு பேசுமே,
உமக்கு என்றும் ஜெயம்
தோல்வி இல்லை என;
பேசும் கர்த்தா! எந்நாளும்
அன்பின் குரலாலே
நீ தனித்தவன் அல்ல என்று;
யான் கேட்கட்டும்
பேசும் உம் மக்களுடன்
தூய்மையில் நடத்தும்,
சந்தோஷத்தால் நிரப்பும்,
ஜெபிக்க போதியும்;
அவர்கள் தங்களையே,
அர்ப்பணம் செய்யட்டும்;
உம்மை அவர்கள் காண,
சீக்கிரமாய் வாரும்!
பேசும்! முற்காலம் போல,
உம் சித்தம் காட்டினீர்;
அறிந்து என் கடமை,
சரியாய்ச் செய்யட்டும்;
கற்பனை பாதை மார்க்கம்,
என்னையும் நடத்தி
என் ஆயுளெல்லாம் உம்மை,
மகிமைப்படும்
bottom of page